BACKGROUND

A decade before there were 10 lakh traditional Pulikulam herd cattle present in the southern part of Tamil Nadu alone, as the time goes their numbers got decreased drastically. The main reason identified by us was, lack of co-ordination among the grazing communities, allocation of grazing land for other development activities, lack of awareness on Forest Rights Act, Unavailability of timely medical assistance for grazing livestock, since people involved in grazing have no contact with the regime; the plans introduced by state and central government are not focused upon the welfare of their pastoral activity. In today’s civilized world, the prevalence of lack of social recognition for the grazing community is also an important reason of their setback.

தென் மாவட்டங்களில் பத்தாண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் பாரம்பரிய புலிக்குளம் மாடுகள் இருந்தன, காலப்போக்கில் அவற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது அதற்கு அடிப்படை காரணம்...  மேய்ச்சல் சமூகத்தினர் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது, மேய்ச்சல் நிலம் அரசின் மற்ற வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்படுவதால் பாரம்பரிய மேய்ச்சல் நிலம் அழிந்து வருகிறது. வன உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லாதது. மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளுக்கான மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகள் சரியான நேரத்திற்கு கிடைப்பதில்லை. மேய்ச்சலில் ஈடுபடுபவர்களுக்கு அரசுக்கும் தொடர்பு இல்லாத காரணத்தால் பாரம்பரிய மேய்ச்சல் வளர்ப்பு முறைக்கு ஏற்றார்போல் அரசின் திட்டம் எதுவும் இல்லை. இன்றைய நாகரிக உலகில் மேய்ச்சல் சமூகத்தினற்கு சமூக  அங்கீகாரம் இல்லாதது மிக முக்கிய காரணமாக பார்க்க முடிகிறது.

SOLUTIONS

AWARENESS

Pastoralists having abysmal cognizance about their rights to graze, grazing land, traditional grazing routes, to avail government subsidies, life insurance, health insurance, medical assistance for livestock; affects their livelihood, since they fail to utilize these benefits.

To resolve this issue, we help them get their inherent rights to graze under Forest Rights Act, 2006. In addition, we started an organization- Thozhuvam Farmer Producer Company Ltd on 31.05.2021 with the support of NABARD-MABIF, to deal with the issues faced by the pastoralists periodically, and to make them avail life and health insurance at ease.

வன உரிமை சட்டம், மேய்ச்சல் நிலம், பாரம்பரிய மேய்ச்சல் வழித்தடம், மருத்துவ காப்பீடு, உடல்நல காப்பீடு, கால்நடைகளுக்கான காப்பீடு மற்றும் மருத்துவ  உதவிகள் கேட்பது குறித்த விழிப்புணர்வு இல்லாததல் பல்வேறு சிக்கல்களை தினம்தோறும் சந்தித்து வருவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.  

இந்தச் சிக்கலைத் தீர்க்க, வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் மேய்ச்சலுக்கான உரிமைகளைப் பெற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மேலும் நபார்டு (NABARD - MABIF) நிறுவன உதவியோடு தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (Thozhuvam Farmer Producer Company Ltd) ஒன்றை 31.05.2021 நிறுவி மேய்ச்சல் சமூகத்தினர் தினம் தோறும் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி வருவதோடு, மேய்ச்சலில் ஈடுபடுவர்களுக்கும், கால்நடைகளுக்கும் மருத்துவ மற்றும் உயிர் காப்பீடு பெற்றுக் கொடுக்கிறோம்.    

MOVEMENT CONSTRAINTS

For a long time, pastoralists are engaged in grazing following their traditional route that directs them towards their desired destination. Annually, according to seasons, they graze around the districts of Madurai, Sivagangai, Ramanathapuram, Virudhunagar, Theni, Dindigul, Tenkasi, Tuticorin and Tirunelveli. However, due to the construction of four-way lanes among these districts, pastoralists face difficulty in reaching their destination and also taking an alternative route consumes significant amount of their time. Besides, it is not an easy task to make their hundreds of cattle to cross a highway lane.  

Upon identifying their constraint, we are in the process of making a digital map comprising of their traditional routes to alert them with the anticipated blockage and suggest them a hassle-free route. In the meantime, we have also requested the Government to construct an underground pavement in the highway that disrupts their movement.

காலம்காலமாக பாரம்பரிய வழித்தடத்தில் மேய்ச்சலில் ஈடுபடுகிறார்கள். காலமாற்றங்களுக்கு ஏற்றார்போல்  ஆண்டுதோறும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சுற்றி சுற்றி மேய்ச்சலில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் மேய்ச்சல் வழித்தடங்களை மறித்து நான்கு வழி பாதைகள் புதிதாக அமைந்ததால், மேய்ச்சலில் ஈடுபடுவோர் தங்கள் இலக்கை அடைவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். மேலும் மாற்றுப் பாதையில் செல்வதால் கணிசமான நேரத்தை செலவிடுகின்றனர். நூற்றுக்கணக்கான கால்நடைகளை நெடுஞ்சாலை பாதையை கடக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக பாரம்பரிய மேய்ச்சல் வழித்தடம் குறித்த டிஜிட்டல் வரைபடம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கிடையில், நான்கு வழிச் சாலைகளில் கால்நடைகள் கடந்து செல்வதற்கு சுரங்க வழிப் பாதை அமைக்க அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்.    

LANDS TAKEN FOR DEVELOPMENT WORKS

For many years, there are acres of pasturage lands being allocated for other development works by the Government, because of a common perception that these lands are outlying/uncultivated land. Due to this, many pastoralists wander around with their hundreds and thousands of cattle in search for forage. To protect their right to graze and also for the welfare of cattle, we have requested the Government to not allocate pasturage lands to other works by emphasizing their benefits for our livelihood and bio-diversity.

பல ஆண்டுகளாக, மேய்ச்சல் நிலத்தை புறம்போக்கு நிலம் என்று நினைத்து அரசு மற்ற வளர்ச்சிப் பணிகளுக்கு மேய்ச்சல் நிலங்களை ஒதுக்குவதால் பாரம்பரிய மேய்ச்சல் நிலம் அழிந்து வருகிறது. இதனால், மேய்ச்சலில் ஈடுபடுவோர் கால்நடைகளுக்கு தீவனம் தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.   

இந்நிலையில் சுற்றுச்சூழலை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவிடும் மேய்ச்சல் சமூகத்தினரின் பாரம்பரிய மேய்ச்சல் உரிமையைப் பாதுகாக்கவும், கால்நடைகளின் நலனுக்காகவும், பல்லுயிர் பெருக்கத்திற்கு அடிப்படை காரணமாக இருப்பதை வலியுறுத்தி மேய்ச்சல் நிலங்களை வேறு பணிகளுக்கு ஒதுக்க வேண்டாம் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.

ABSENCE OF MARKETING CHANNELS

Based on the Tamil proverbial "ஆட்டெருஅவ்வாண்டு, மாட்டெரு மறுஆண்டு" meaning, the manure generated from the waste of herd goat and cow; the former could keep a land fertile for a year, whereas, the latter could keep a land fertile for two years. Thus, it is a testament to the use of its waste as 'manure', since the livestock raised upon following traditional grazing approaches, feeding only on naturally grown fodder.  

Although the microorganisms required to enrich the land productivity are abundant in this manure, there is a huge gap between the organic farmers and the grazing community. The milk procured from traditional cattle is highly nutritious, but due to the unavailability of proper marketing stream their market gain is quite low. In addition, there isn't any government scheme that is directly focused upon the people involved in the pastoral activity, makes the pastoralists gain minimum profit for their work.

பாரம்பரிய மேய்ச்சல் முறையை பின்பற்றி வளர்க்கப்படும் கால்நடைகள் இயற்கையாக வளர்ந்த தீவனங்களை உண்பதால், இதன் கழிவுகளை 'தொழுஉரமாக' விவசாயிகள் பயன்படுத்தி வந்ததற்கு "ஆட்டெரு அவ்வாண்டு, மாட்டெரு மறுஆண்டு" என்ற பழமொழியே சாட்சி.   

நிலத்தை வளப்படுத்த வேண்டிய நுண்ணயிர்கள் தொழுஉரத்தில் அதிகமாக இருந்தும் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கும் மேய்ச்சல் சமூகத்தினருக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. நாட்டின மாடுகளின் பால் அதிக சத்துள்ளதாக இருந்தும் சந்தைப்படுத்த வழியில்லை. மேலும் மேய்ச்சலில் ஈடுபடுவர்களுக்கு ஏற்றார்போல் அரசின் திட்டம் இல்லாததால் லாபம் குறைவாகவே கிடைக்கிறது.

Through our Thozhuvam Farmer Producer Company we are raising awareness among the organic farmers about the 'manure' available from the waste of livestock reared following the traditional grazing approach and its benefits. We also manufacture, 'Gana Jeevamirtham argol, Panchakavya, Herbal Buttermilk Solution, Herbal Insect Repellent from cow’s urine, Dasakavya, Fish Amino Acid, Jeevamirtham, Beejamrutha, EM Solution, Grinded buttermilk Solution, Gana Jeevamirtham', using value-added technology.

Furthermore, from the dung of Pulikulam cattle, we manufacture and market value added products such as dung firewood, dung flower pot, earthworm manure, goat dung feed, incense stick, instant benzoin, cup shaped benzoin, sacred ashes, mosquito repellent, lamp, tooth powder, dishwashing soap, dung handicrafts. Besides, we are involving only women from the grazing community for these activities.

தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் பாரம்பரிய மேய்ச்சல் முறையை பின்பற்றி வளர்க்கப்படும் கால்நடை கழிவுகளில் இருந்து கிடைக்கும் 'தொழுஉரம்' குறித்தும் அதன் பயன்கள் குறித்து இயற்கை வேளாண் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி சந்தை படுத்தி வருகிறோம். மேலும் 'கன ஜீவாமிர்தம் வரட்டி, பஞ்சகவ்யம், மூலிகை மோர் கரைசல், மூலிகை கோமியம் பூச்சி விரட்டி, தசகவ்யா, மீன் அமினோ அமிலம், ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், EM கரைசல், தேமோர் கரைசல், கன ஜீவாமிர்தம் ஆகிய பொருட்களை மதிப்புக் கூட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரித்து, சந்தை படுத்துகிறோம்.  

மேலும்,  புலிக்குளம் மாட்டுச் சாணத்தில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்களான 'சாண விறகு, சாண பூந்தொட்டி, மண்புழு உரம், ஆட்டு சாண ஊட்டம், ஊதுபத்தி, உடனடி சாம்பிராணி, கப் சாம்பிராணி, விபூதி, கொசு விரட்டி, விளக்கு, பல்பொடி, பாத்திரம் துலக்கும் சோப்பு, சாணத்தால் ஆன கைவினைப் பொருள்கள் ஆகிய பொருட்களை தயாரித்து சந்தை படுத்துகிறோம். இப்பணிகளில் மேய்ச்சல் சமூக பெண்கக்குள் முறையாக  ஈடுபடுத்தி வருகிறோம்.